சர்வதேச பிளாஸ்டிக்பை ஒழிப்பு தினம்- கையெழுத்து பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வு

சர்வதேச பிளாஸ்டிக்பை ஒழிப்பு தினம்- கையெழுத்து பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வு

திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகம் இல்லாத சந்தையாக மாற்ற பொதுமக்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர்.

சர்வதேச பிளாஸ்டிக் பையில்ல்லா தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி ஆனது NAMA Facilityன் நிதியுதவி திட்டமான சர்குலர் வேஸ்ட்சொலியூஷன்ஸ் உடன் இணைந்து உழவர் சந்தையை சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியது.

    தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி மாநகர அதிகாரிகள் செல்வ பாலாஜி அபிஷேகபுரம் மண்டல ஆணையர், இளங்கோவன் துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் துப்புரவு ஆய்வாளர் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் சுப்புராமன்,ஸ்கோப் டிரஸ்ட், வாசுதேவன் ஐந்தாவது ஜெனரல் அகடமி, தன்னார்வ குடிமக்கள் பூங்கொடி அபிராமி டிரைவிங் ஸ்கூல்,ஹீ லர் டிஆர் வெங்கட்ராமன் கூடுதல் அட்வகேட் ஜெனரல்,பொதுமக்கள் போன்றவர்கள் பங்கேற்றனர் ஒரு முறை மட்டுமே உபயோகித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து திடக் கழிவுகளை முறையாக கையாளுவதன் மூலம் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வு நோக்கமாகும் .

இந்த கையெழுத்து பிரச்சாரத்தை பத்மஸ்ரீ சுப்புராமன் மற்றும் திருச்சி மாநகர அதிகாரிகள் துவக்கி வைத்தனர்.

இந்த கையெழுத்து இயக்க பிரச்சாரத்தில் சுமார் 200-250 பேர் பங்கேற்று உறுதிமொழி பலகையில் கையொப்பமிட்டனர்.

சந்தியில் உள்ள 112 கடைக்காரர்களும் சந்தைக்கு வருகை தந்த பொதுமக்களுக்கும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.

 மேலும் தன்னார்வ தொண்டர்கள் சந்தையை சுற்றிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி தூய்மைப்படுத்தும் இயக்கத்தை நடத்தினார்.

 இனிவரும் நாட்களில் அவ்வப்போது சந்தையில் விழிப்புணர்வு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 கூடுதலாக சர்குலர் வேஸ்ட் சொல்யூஷன்ஸ் அணி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் மாற்றத்தை கண்காணிப்பதிலௌ மாநகராட்சிக்கு துணை புரியும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5


#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO