சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு பேரணி
சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக இன்று (20.12.2023) கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு WALKATHON நிகழ்வு சுமார் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் M.பிரதீப்குமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் R.ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, பொன்ராஜ், இப்ராஹிம், செல்வராஜ் மகாதேவன், கந்தவேல், அன்புச்செல்வன், வடிவேல், மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறுகையில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அனைவரும் சிறுதானிய உணவை உண்ண வேண்டும் என்றும், வாரத்தில் இரண்டு நாட்களாவது கார்போஹெய்ட்ரேட் உணவை தவிர்த்து சிறுதானிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய உணவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறுதானிய உணவே சிகரம் தொடும் வாழ்வை தரும் சாமை சோறுக்கு ஆமை வயது. கேழ்வரகு உணவுக்கு உறவு சர்க்கரை நோய்க்கு எதிரி, வரகு உணவை உண்டால் வாழ்க்கை வரமே. கம்பு உடலுக்கு தெம்பு, சோள உணவே சோம்பலை நீக்கும். தினை உணவே இதயத்தின் துணை, தினை மாவை தின்று திடமான உடலை பெறுவீர், சாமை உணவுகளே சத்தான ஆதாரம், சிறுதானிய உணவுகளே சிரமமற்ற வாழ்வை தரும், குதிரைவாலி உணவை உண்டு குறைவற்ற நலன் பெறுவீர் மற்றும் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது எனும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தொடங்கி நீதிமன்றம் ரவுண்டானா வரை இந்த பேரணி நடைபெற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision