தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மண்டலம் பணியிடங்களுக்கான ஆண், பெண் இருபாலர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்காலியிடம் அரியலூர் மண்டலத்திற்கு நிரப்புதல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் 11.04.2025-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் ஓட்டுநர் மற்றும்
நடத்துனர் உரிமைச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் இதர கல்விச்சான்றுகளுடன் நேரில் வருகை புரிந்து பதிவினை சரிபார்த்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அருந்ததியர் (SCA), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC), பழங்குடியினர் (ST), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் (MBC), பிற்பட்ட வகுப்பினர் (BC) – 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் (பொதுப்பிரிவு) (OC) – 40 வயதிற்குள்ளும் EX-SERVICE MAN 53 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision