வழக்கறிஞர்கள் பேரணி - ஆதரவு தெரிவித்த திருச்சி எம்.பி

வழக்கறிஞர்கள் பேரணி - ஆதரவு தெரிவித்த திருச்சி எம்.பி

மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் மூன்று சட்டங்களை திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அன்றைய நாள் முதலே தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதே போல திருச்சி நீதிமன்றம் முன்பு 1 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டமும், 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், 3 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஆகியவற்றை வழக்கறிஞர்கள் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று திருச்சியில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் ஜாக் இணைந்து நடத்தும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உள்ளனர் .

திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முதல் உழவர் சந்தை மைதானம் வரை பேரணியாக சென்று உழவர் சந்தை மைதானத்தில் இன்று மதியம் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. வழக்கறிஞர்களின் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision