திருச்சி மாவட்டத்திற்கு (10.01.2025) அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) நடைபெறுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு (10.01.2025) (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும், எனினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இவ்விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 2025-ஆம் ஆண்டு சனவரி திங்கள் 25-ஆம் நாள் (25.01.2025) சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision