புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய எம்எல்ஏ
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அயிலாபேட்டை கிராமத்தில் புதிய நியாய விலை கடையை பழனியாண்டி எம்.எல்.ஏ திறந்து வைத்தார். இதேபோன்று கொடியாலம் மற்றும் அயிலாப்பேட்டை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார்.
பின்னர் கம்பரசம்பேட்டை பெரியார் நகரில் புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் திமுக அந்தநல்லூர் ஒன்றிய துணைச் செயலாளர் மலர் அறிவரசன், திமுக நிர்வாகிகள் புலிவலம் பழனிவேல், கைக்குடி சாமி, கௌதமன், ரமணன், குடமுருட்டி ஆறுமுகம்,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், முன்னாள் கவுன்சிலர் வளர்மதி சிவசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision