தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் பெருகும் மக்கள் கூட்டம். போக்குவரத்து இடையூறை தவிர்க்க காவல்துறை எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் பெருகும் மக்கள் கூட்டம். போக்குவரத்து இடையூறை தவிர்க்க காவல்துறை எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் பெருகும் மக்கள் கூட்டம். போக்குவரத்து இடையூறை தவிர்க்க காவல்துறை எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை இக்கேள்விக்கான  கருத்துக்களை மக்களிடம் திருச்சி விஷன் குழு கேட்டறிந்தது. மக்களின் கருத்துக்கள் பின்வருமாறு.

விஜய்

 பண்டிகைக் காலங்களில் வாகனங்களை மக்கள் கூட்டம் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குள் தேவையின்றி அனுமதிக்கக்கூடாது.

கடைவீதியில் மக்கள் நடந்து செல்லும் பாதையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதைத் தடுப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தலாம்.

கடைவீதிகளில் மக்கள் செல்லுவதற்கும், வருவதற்கும் ஏற்றாற்போல் வழிகள் வடிவமைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம்.

கடைவீதிகளில் மருத்துவமனைகளும் அமைந்திருப்பதால் அவசர காலத்தில் மக்கள் அவதியின்றி எளிதாக அணுகும் வகையில் ஆம்புலன்ஸ் பாதை அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம் என்றார்.

சுபாசதிஷ்குமார்.

வாகன நிறுத்துமிடங்களில் முறையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்தல், கடைகளில் இருந்து குறிப்பிட்ட இடைவெளி முன்னர் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்தல், சாலையோர சிறு சிறு வியாபாரிகளின் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது, அதிக ஒரு வழித்தடத்தை ஏற்படுத்தி மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம் என்றார்

மணிசிங் 

 பெரியகடைவீதி,சின்ன கடை தெரு, சிங்கார தோப்பு மற்றும் பெரிய கம்மாள தெரு ஆகிய இடங்களில் பண்டிகை காலங்களில் மக்கள் நெருக்கம் காணப்படும் பகுதிகளாகும். இங்குள்ள பகுதிகளில் இருபக்கம் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனை முதலில் சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

 இங்கு வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த பிஷப்ஹீபர் பள்ளி மைதானத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகளை தற்காலிகமாக ஜோசப் கல்லூரி மைதானத்தில் அமைக்க ஏற்பாடு செய்தால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு உள்ளது  ன்றார்

சந்திரசேகர்:

கூட்ட நெரிசலுக்கு ஏற்றவாறு பயணிகள் பேருந்து நிழற்குடையை சரியான தேவை உள்ள இடத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும்

ஆட்டோ மற்றும் OLA விற்கு குறிப்பட்ட இடத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

பேருந்துகள் எளிதாக செல்ல வெவ்வேறு வழி மற்றும் பேருந்து மார்க்கம் அமைக்கப்பட வேண்டும்

ஆங்காங்கே கொரானா பற்றிய விழிப்புணர்வு பதாதைகளை வைக்க வேண்டும். முடிந்த அளவு கூட்டத்தை தவிர்க்குமாறு பொதுமக்களிற்கு ஒலிபெருக்கியில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

கனகராஜ் 

50 அடிக்கு ஒரு காவல்துறை நிற்பதன் மூலம் திருட்டு சம்பந்தமான எந்தவித அச்சமின்றி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

மழை காலத்தில் ஏற்படும் சாலை பாதிப்பு களை பராமரிப்பு செய்தல் அவசியம்,

சிறு குறு வியபாரிகள் கொரொனா விதிமுறைகள் பின்பற்ற செய்தல் அவசியம்,

இப்பொழுதே மாற்று வழிக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்,குறிப்பாக பொது மக்கள் மாற்று வழியை பற்றிய அறிவிப்பை ஒவ்வொரு சிக்னல்கள் முலம் தெரிவித்தல் வேண்டும்என்றார்.

பிரியதர்ஷினி.

திருச்சி மலைக்கோட்டை வீதியில் இரு சக்கர வாகனம், வாகனம் நான்கு சக்கர வாகனம் அனுமதிக்க கூடாது.

நான்கு சக்கர வாகனங்களினை மலைக்கோட்டை வீதியில் அனுமதிக்கக் கூடாது.

அனைவரும் மாஸ்க் அணிந்து வரவும் இடைவெளி விட்டு நடந்து செல்லவேண்டும்என்றார்.

கோபாலக்கிருஷ்ணன்.

திருச்சி

ஜவுளி கடைக்கு போகும்போது ஒரு வழியும் திரும்பி வரும்போது மற்றொரு பாதையில் திருப்பி அனுப்புவது சிறந்ததாக அமையும் காவல்துறை அதிகாரிகள் மக்களை கண்காணிக்கவும் மிக எளிதாக இருக்கும்.

 தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு துணி கடைகள் முன்பு போடப்படும் இரு சக்கர வாகனம் நிறுத்த தடை செய்யப்பட வேண்டும் பஜார் நகரை சுற்றி அரை கிலோ மீட்டர் தள்ளி காலியான இடத்தில் பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

பன்னீர்செல்வம்.

 சாலையின் வலப்புறம் இடப்புறம் மட்டும் மக்கள் செல்லும் வகையில் கயிரு மற்றும் மூங்கில் வகையுடன் பாதசாலை அமைக்க வேண்டும். அதை காவல்துறை 50 அடிக்கு ஒருவர் என்ற வீதம் நின்று கண்காணிக்க வேண்டும் என்றார்.

கல்யாண்,

கண்காணிப்பு கேமராக்கள் அதிகமாக பயன்டுத்துவதோடு ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

போக்குவரத்து துறை கடைப்பிடிக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் பொது மக்களும் தங்களுடைய கடமை உணர்ந்து இந்த பேரிடர் காலத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUusடெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn