பிஷப் ஹீபர் கல்லூரியில் நடமாடும் கணினி பயிற்சி மையம் - World on Wheels Mobile DIGITAL Learning Lab 

பிஷப் ஹீபர் கல்லூரியில் நடமாடும் கணினி பயிற்சி மையம் - World on Wheels Mobile DIGITAL Learning Lab 

ரெடிங்டன்  அறக்கட்டளை சார்பில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள WOW சொகுசு பஸ்ஸில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் கணினி பயிற்ச்சி மையம் பிஷப் ஹீபர் கல்லூரிக்கு வருகை தந்துள்ளது. இப்பேருந்தில் சுமார் 20 கம்ப்யூட்டர்கள் அதற்கான செகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோகுசு வாகனத்தில் டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டு, வலை கான்பரன்சிங் வசதிகள் மற்றும் வெளிப்புற திரையிடலுக்கான ஏற்பாடுகள் உள்ளன.

கணினி மையத்திற்கான மின்சாரம் கூரையில் மேல் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி ஆற்றல் மூலம் கிடைக்கிறது. பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்க புலம் இதற்க்கான ஒழுங்கை ஏற்ப்பாடு செய்து உள்ளது. இந்த வசதியின் மூலம்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கணினி பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மூலம் தத்து எடுக்க பட்டுள்ள கிராமங்கள் மற்றும் பள்ளிகள் பயனடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் முனைவர் D. சந்திரசேகரன் இந்த நடமாடும் கணினி மையத்தை பார்வையிட்டு, இப்பணியை துவங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரன், கல்லூரி நிதியாளர் முனைவர் ஞானராஜ், குருத்துவ செயலர் அருள் திரு சுத, விரிவாக்க புல தலைவர் Dr. ஆனந்த் கிதியோன், இணை தலைவர் முனைவர் காப்ரியேல், விரிவாக்க புல அலுவலர்கள் முனைவர் ரவி மற்றும் நெல்சன் மற்றும் ரெடிங்டன் அறக்கட்டளை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn