திருச்சி தேசியக் கல்லூரியில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு புதிய கைப்பந்து அணி அமைக்கப்பட்டுள்ளது

திருச்சி தேசியக் கல்லூரியில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு புதிய கைப்பந்து அணி அமைக்கப்பட்டுள்ளது

திருச்சி தேசியக் கல்லூரியில் சிறப்பு கைப்பந்து அணி சறப்பு ஒலிம்பிக் பாரத் குழுவுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது என்று இதன் இயக்குனர் மற்றும் செயலாளருமான பிரசன்ன பாலாஜி கூறியுள்ளார்.

 மேலும் அவர் இது குறித்து கூறுகையில்  

"அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டுக்கான முன்னுரிமை பிரிவில் தேசிய கூட்டமைப்பாக விளையாட்டு அமைச்சகத்தால் SOB அங்கீகாரம் பெற்றுள்ளது.

 திருச்சி தேசியக் கல்லூரியில் இளங்கலை உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் துறையில் 300 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

 14 மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர் இந்த மாணவர்களுக்கு மற்ற வழக்கமான மாணவர்கள் சேர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு

ஒருங்கிணைந்த கால்பந்து அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் என்பது பாரா ஒலிம்பிக்கில் இருந்து வேறுபட்டது சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கற்றல் குறைபாடு அறிவாற்றல் தாமதம் அல்லது வளர்ச்சி குறைபாடு உள்ள அனைத்து திறன் நிலைகளையும் கொண்டவர்கள்.

 அதே சமயம் பாராஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் 10 வகையான உடல் ஊனமுற்றவர்கள் பிரிவுகளில் பங்கேற்பார்கள். 

திருச்சி தேசியக் கல்லூரியில் உள்ள பயிற்சியாளர்கள் சிறப்பு கைப்பந்து அணியை கவனித்துக் கொள்வதுடன் மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், இதற்கிடையில் பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழுவினருடன் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் உதவுவார்கள்" என்றும் கூறினார்.

 தொடக்க விழா நிகழ்வில் திருச்சி தேசியக் கல்லூரியில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் புதிய அத்தியாயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn