அரசு பள்ளிக்கு உதவிய ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம்

ஒமேகா ஹெல்த் கேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் பணியாளர்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் வாயிலாக இன்று திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.16,000 மதிப்புள்ள குழந்தைகள் படிக்கக்கூடிய பிளே மெட்டீரியல்ஸ் வழங்கப்பட்டது.
இதில் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் மனிதவள மேலாண் இயக்குநர் திரு. ஆண்டனி ஈபன் தலைமை யில் ஒமேகா பணியாளர்கள் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பொருட்களை வழங்கினர்.பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் அனைவரையும் வரவேற்றார்.
ஆசிரியை சரண்யா நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் உமா, சகாயராணி, மேரிசெரோபியா, மோகனா, மரியம் ஜமீலா, சியாமளா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision