விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு திருச்சியில் காவல்துறை அனுமதி மறுப்பா - விசிக தலைவர் திருமா பேட்டி.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு திருச்சியில் காவல்துறை  அனுமதி மறுப்பா -  விசிக தலைவர் திருமா பேட்டி.

வரும் டிசம்பர் 23 விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் "வெல்லும் ஜனநாயகம்" என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ய  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

திமுக கூட்டணியில் உள்ள தமிழக தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இந்தியா கூட்டணி சார்பில் தேசிய அளவிலும் தலைவர்களை அழைக்க திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ (எம் எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க இசைவு அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். திருச்சியில்  மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்காக வந்துள்ளேன். மாநாடு நடத்துவதற்கு திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனாலும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை   காரணம் காட்டி மாநகருக்குள் நடத்த அனுமதி மறுத்ததுடன் புறநகரில் நடத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

பாஜக கூட்டங்களில் பங்கேற்பவர்கள் பெரும்பாலானவர்கள் அதிமுகவினர் பாமகவினர்கள் தான். மற்ற மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டுகிறார்கள் இதில் ஒரு சதவீதம் பேர் கூட பிஜேபியை சேர்ந்தவர்கள் கிடையாது. கூட்டணிக் கட்சி மற்றும்  சாதி அமைப்புகளிடமிருந்து ஆள் பிடிக்கிறார்கள். பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் பெரியார் சிலை அகற்றப்படும், இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும் என அண்ணாமலை கூறி மணலை கயிறாக திரிக்க  முயல்கிறார்.  ஒருபோதும் பெரியார் சிலையை ' அகற்ற முடியாது, ஊடக பரபரப்புக்காக பேசி வருகிறார்.


பெரியார், அம்பேத்கர் அடையாளங்களோடு தான் பாமக  துவங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது பெரியாரை விமர்சித்தால் பாமக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பிஜேபியை நோக்கி பாமக தொண்டர்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். தமிழ் உலக புகழ் பெற்ற மொழி, பாரத பிரதமர் மோடி வருவதற்கு முன்பே தமிழ் பல்வேறு நாடுகளில் தமிழ் பரவியது. அண்ணாமலை இதுபோன்று கூறுவதால் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள். கமலஹாசன் நடத்தும் பிக் பாஸை நான் பார்ப்பதில்லை எனவே அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision