6 லட்சம் மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை கைப்பற்றிய காவல் துறையினர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துறையூர் பெரிய கடைவீதி பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வடிவேல். தலைமை காவலர் பாலகிருஷ்ணன் மற்றும் பீட் காவலர் தமிழரசன் ஆகியோர் இரவு ரோந்து அலுவலில்
இருந்த போது இன்று (05.07.2025) அதிகாலை 3:40 மணியளவில் துறையூர் பெரிய கடைவீதி அருகே வந்த கார் மேற்படி காவலர்களை பார்த்தவுடன் வேகமாக சென்றதால் சந்தேகமடைந்த காவலர்கள் காரினை துரத்தி சென்றபோது சொரத்தூர் கட் ரோடு அருகே காரை நிறுத்திவிட்டு காரில் வந்தவர்கள் ஓடிவிட்டனர்.
காரினை சோதனை செய்த போது அதில் 24 மூட்டை ஹான்ஸ் (374.5 கிலோ), 2) 5 மூட்டை கூல் லிப் (27.5 கிலோ), 3) 14 மூட்டை விமல் பான் மசாலா (70 கிலோ), 4) 14 மூட்டை விமல் Mexing பாக்கு (14 கிலோ) என மொத்தம் 472 கிலோ (மொத்த மதிப்பு ரூ. 6 லட்சம்) அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றி
துறையூர் காவல் நிலைய குற்ற சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம் அவர்களின் உத்தரவின் பேரில் துறையூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






