திருச்சி மாவட்டத்திலுள்ள 8,34,099 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருச்சி மாவட்டத்திலுள்ள 8,34,099 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 8,33,131 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்

968 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 834099 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1219 நியாய விலைக்கடைகளின் மூலமாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது.

திருச்சிராப்பள்ளி பெரியமிளகுபாறை நியாய விலைக்கடையில் இன்று (09.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், பொங்கல் பரிசு தொகுப்பை பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சிமுறையை பின்பற்றும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்குரிய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, டோக்கன்கள் வழங்கப்பட்ட அனைவருக்கும் (09.01.2025) முதல் (12.01.2025) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறத்தவறிய அனைவரும் (13.01.2025) அன்று பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிகழ்வில், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள். உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன். திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் / செயலாட்சியர் தா.அரசு, வேளாண்மை துறை இணை இயக்குநர் யூ.வசந்தா,

திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் பா.செந்தில்குமார், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் வெ.மாரிச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.சாந்தி, மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision