குண்டும் குழியுமான சாலை - பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதி
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு வின்நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பிரதான சாலையானது பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு சீரமைக்காமல் கிடப்பிலே உள்ளது.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலை வழியாகத்தான் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அதேபோல இங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாள்தோறும் எண்ணற்ற வாகனங்கள் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இந்த சாலையானது குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அண்மையில் பெய்த கன மழை காரணமாக சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து தண்ணீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் இந்த சாலையை சீரமைத்து தரக் கோரி மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கவுன்சிலர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி இளநிலை செயற்பொறியாளரிடம் கேட்டபோது சாலைகள் அமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், மழைக்காலம் முடிந்தவுடன் சாலைகள் அமைக்கப்படும் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார். குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வின்நகர் பிரதான சாலையை சீரமைத்து தரமான தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision