மின்கம்பத்தை கயிற்றால் கட்டி வைத்துள்ள அவலம்- விபத்து ஏற்படும் முன் மாற்றப்படுமா?

மின்கம்பத்தை கயிற்றால் கட்டி வைத்துள்ள அவலம்- விபத்து ஏற்படும் முன் மாற்றப்படுமா?

திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகர் அருகில் சரோன் பேக்கரி முன்னதாக எப்பொழுது உடைந்து விழுமோ என்ற நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த தெருவில் செல்லும் பொதுமக்கள் அப்பகுதியில் வசிப்பவர்கள் பலமுறை மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் கொடுத்துள்ளனர்.

 இது மட்டுமில்லாமல் இணையதளம் வாயிலாக மின்வாரியத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

அந்த மின்கம்பம்த்திலுள்ள சிமெண்ட் பெயர்ந்து விழாமல் இருக்க பாதுகாப்பாக மின்கம்பத்தை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision