ஜனாதிபதி வருகை - திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை - கலெக்டர் அறிவிப்பு

ஜனாதிபதி வருகை - திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை - கலெக்டர் அறிவிப்பு

இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு திருச்சி விமான நிலையத்திற்கு நாளை மறுநாள் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க திருச்சி விமான நிலையத்திற்கு நாளை மறுநாள் (30-ந்தேதி) வருகை தரவுள்ளதால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (29-ந்தேதி) ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. 

எனவே நாளையும்,நாளை மறுநாளும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision