திருச்சி மாநகரில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு

திருச்சி மாநகரில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது ஏற்கனவே A, B இரண்டு பிரிவில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது C பிரிவிற்கான பதவி உயர்வு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திருச்சி மாநகரில் பணியாற்றி வரும் மூன்று காவல் உதவி ஆய்வாளர்களுக்கு காவல் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று குற்றப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று நுண்ணறிவு பிரிவிற்கும்,

உதவி ஆய்வாளர் மாரிமுத்து காவல் ஆய்வாளராக பதவி வரும் பெற்று மத்திய மண்டலத்திற்கு மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn