சாலையோர புளிய மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

சாலையோர புளிய மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் பகுதியில் சாலையோரம் உள்ள 16க்கும் மேற்பட்ட பழமையான புளிய மரங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வெட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் நால்ரோடு பகுதியில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைப்பதற்காக சாலை விரிவாக்க பணி சென்ட்ரல் ரோடு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் பண்டு நிதியின் கீழ் ரூபாய் 5.73 கோடி செலவில் நடைபெற உள்ளது. இதற்காக சாலையோர இருபுறமும் உள்ள பழமையான புளியா மரங்கள் 16க்கும் மேற்பட்டவைகளை வெட்டும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டனர் .

இதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் சாலை நிர்வாகத்திற்கு போதுமான இடம் இருக்கும் நிலையில் சாலையோரத்தில் இருக்கக்கூடிய சாலைக்கு விரிவாக்க பணிகளுக்கு இடையூறு இல்லாத புளிய மரங்களை வெட்டுவதற்கு நாங்கள் விடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தது மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று தான் இந்த மரங்களை வெட்டி வருகிறோம் எனவே மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தால் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என கூறி சாலை ஓரத்தில் உள்ள புளிய மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision