திருச்சியில் 2வது நாளாக வீடுகளை சுற்றி நிற்கும் மழைநீர் - இடுப்பளவு நீரில் கடக்கும் மக்கள்
திருச்சியில் நேற்று (08.11.2021) 5 ஆயிரம் கன அடி நீர் வரை சென்றது. இன்று 2 ஆயிரத்து 500 கன அடி நீர் வருவதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை விராலிமலை குளித்தலை பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீர் வாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
முக்கியமாக வடிகால் பகுதிகளில் வீடுகள் ஆக்கிரமித்து கட்டி உள்ளதும், தாழ்வான பகுதிகளில் விவசாய நிலங்களில் கட்டியுள்ள வீடுகளிலும், மழை நீர் அதிக அளவு புகுந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மழை நீரின் அளவு நீர் வரத்து குறைந்ததாலும் வீடுகளை சுற்றி உள்ள மழைநீர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (09.11.2021) மழைநீர் வடியாமல் உள்ளது.
உறையூர் மின்சார வாரிய ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். மின் விநியோகம் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரிய ஊழியர்கள் பணியில் 24 மணி நேரமும் இப்பகுதியில் உள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision