திருச்சி தினமலர் நாளிதழில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஐயா கோவிந்தசாமி மறைவு மிகுந்த துயரத்திற்குரியது. வயது மூப்பின் காரணமாக மறைந்தாலும் அவரது மறைவு பெரும் இழப்பாகும்.
அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். அவரை நலம் விசாரித்தும் அவ்வப்போது சென்று பார்த்தும் வந்துள்ளோம்.
அப்பொழுது கூட பத்திரிக்கையாளர்களின் நலனை பற்றியே பேசுவார். அன்பானவர், பண்பானவர், இனிமையாக பேசக் கூடியவர் அவரது மறைவால் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்களுக்கும். பத்திரிக்கை & ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கு திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் இரங்கலையும், “வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments