கொரோனாவை வைத்து உதவி செய்கிறோம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பல் - பொதுமக்களே உஷார்!!

கொரோனாவை வைத்து உதவி செய்கிறோம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பல் - பொதுமக்களே உஷார்!!

"கொரோனா" என்ற ஒற்றை வார்த்தை கடந்த இரண்டு வருடங்களாக தினந்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது, என இன்றளவும் தெரியாமல் தினந்தோறும் அரசு கட்டுப்பாடுகளுடன் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம்.

Advertisement

கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முதலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் தளர்வுகள் இருந்து தற்போது முழு ஊரடங்கு வந்துள்ளது.

கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கின் போது சாலையில் உணவின்றி தவித்த ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்கள் என அனைவருக்கும் இன்றளவும் உதவி செய்துவரும் ஒரு சில உண்மையான என்.ஜி‌.ஓக்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இருந்துதான் வருகின்றனர்.

ஆனால் இப்போதைய காலகட்டத்தில் உதவி என்ற பெயரிலும், உணவு வழங்குவதாகவும் கூறி ஒரு மிகப் பெரிய பிசினஸாக மாற்றி கொள்ளை அடிப்பதாக சில தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "நாங்கள் கொரோனா காலகட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கிறோம், 25 ரூபாய் தாருங்கள், 31 ரூபாய் தாருங்கள் ஒருவரின் பசியை போக்கலாம்" என ஆங்காங்கே சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப் மெசேஜ்களும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. 25 ரூபாய் தானே கேட்கிறார்கள், 30 ரூபாய் தானே கேட்கிறார்கள் என நாம் நினைத்து கொடுக்கும்போது அதுவே ஒரு 200 பேர் கொடுத்தால், 500 பேர் கொடுத்தால் அது எவ்வளவோ பெரிய தொகையில் வந்து நிற்கும் என யோசிப்போம்.

இதைவிட ஒரு படி தாண்டி பொது மக்களின் அனுதாபத்தை பயன்படுத்தி பல வீடியோக்களையும் பதிவிட்டு அதை சமூக வலைதளங்களில் பரவச் செய்து இதையும் நம்பி பல பொதுமக்கள் ஏமாந்து தான் வருகின்றனர். கொரோனா என்னும் கொடூரம் ஒருபுறம் மனிதனை ஆட்டிப்படைத்தாலும், கொரோனாவை பயன்படுத்தி உதவி என்ற பெயரில் கொடூரத்தை செய்யும் பலர் இதனை பிசினஸாக தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது மற்றுமொரு கொடூரம். 

Advertisement

ஒரு சில டுபாக்கூர் இதுபோல் செய்வதால் உண்மையாக உதவி செய்பவர்கள் முகங்களும் சுளிக்கின்றனர். "நாங்கள் இது போல் உதவி செய்யும் அனைவரையும் சுட்டிக் காட்டவில்லை.... ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்"

நீங்கள் உதவி செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. இல்லாதோருக்கு உதவுவதுதான் இயல்பு. அதுவும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் உதவும் நீங்கள் அனைவருமே பாராட்டுக்கூறியவர்கள்.

நீங்கள் பணமாகவும் மற்றும் பொருளாகவும் ஒருவருக்கு கொடுத்தால் அது சென்றடைகிறதா அல்லது உரியவருக்கு சேருகிறதா என்பதை தெரிந்துகொண்டு தயவு செய்து உதவி செய்யுங்கள். நீங்கள் அனுப்பும் பணம் உரியவருக்கு போய் சேர்கிறதா என்பதை அறிந்து செயல்பட்டால் ஒருபுறம் உதவியும் மறுபுறம் இது போல் செயல்படும் டூபாக்கூர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட முடியும்.

இன்றளவும் பொதுமக்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு, சமூக ஆர்வலர்கள், என்ஜிஓ இருந்துதான் வருகின்றனர். அவர்களுடன் செயல்படுவோம்...

பொதுமக்கள் நலன் கருதி...

திருச்சி விஷன் டீம்

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx