கொரோனா காலகட்டத்தை பயனுள்ளதாக்கி மகளிர் தினத்தில் நூல் வெளியிட்ட பள்ளி சகோதரிகள்!!

கொரோனா காலகட்டத்தை பயனுள்ளதாக்கி மகளிர் தினத்தில் நூல் வெளியிட்ட பள்ளி சகோதரிகள்!!

Advertisement

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முசிறியில் ஒரே மேடையில் இரண்டு சகோதரிகள் தாங்கள் எழுதிய நூலினை இன்று வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

Advertisement

திருச்சி மாவட்டம் முசிறியில் புத்தக கண்காட்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் இறுதி நாளான இன்று சகோதரிகளின் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.கொரோனா காலகட்டத்தில் பள்ளி விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் செலவழித்து தாங்கள் கற்றுவந்த நூலை வேறு மொழியில் இன்று நூலாக மாற்றி பலருக்கு பயனுள்ள வகையில் வெளியிட்டிருக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் - நாகேஸ்வரி தம்பதியினர். சசிகுமார் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பள்ளிப் பருவத்திலேயே நூல் வெளியிடும் அளவிற்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்து வளர்த்த இந்த பெற்றோர்கள் உண்மையிலேயே கிரேட் தான்!

இவர்களுடைய மூத்த மகள் அப்சரா. பதினோராம் வகுப்பு படித்து வரும் இவர் இன்று நடைபெற்ற விழாவில் "அவ்வையாரின் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன்" என்ற நீதிநெறி நூலை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து இந்த சின்னஞ்சிறு வயதில் நூலாக இன்று வெளியிட்டுள்ளார். அதேபோல அவருடைய சகோதரி லயஸ்ரீ. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். தொகுத்த அகரவரிசைப்படி தமிழ்- ஆங்கிலப் பழமொழிகள் என்ற நூலை வெளியிட்டு உள்ளனர்.

Advertisement

இந்நிகழ்வில் தமிழ் ஆசிரியர் பாஸ்கரன், முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், கவிஞர் மணமேடு குருநாதன், திரைப்பட பாடலாசிரியர் தமிழன் ராகுல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மாவட்ட மேலாளர் குமார், மாவட்ட நூலக அதிகாரி சிவகுமார்,  புலவர் புகழேந்தி மற்றும் பலர் கலந்துகொண்டு இளம் எழுத்தாளர்களான பள்ளி மாணவிகளை பாராட்டினர்.

சின்னஞ்சிறு வயதில் நூல் வெளியிட்டும், கொரோனா காலகட்டத்தையும் பயனுள்ள வகையில் செலவழித்த மாணவிகள் நூல் உலகில் இளம் நூலாசிரியராக திகழ்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I