நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே செயல்பட்டு வந்த உணவு வணிகத்திற்கு சீல்

நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே செயல்பட்டு வந்த உணவு வணிகத்திற்கு சீல்

 பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் அப்துல்லா உணவகத்தை, உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர் Dr.R.ரமேஷ்பாபு,M.B.B.S., அவர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் L.ஸ்டாலின், E.வசந்தன், வடிவேல் மற்றும் T.சையது இப்ராஹிம் ஆகியோர்களால் 05.07.2022 செவ்வாய் கிழமை அன்று ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது அந்த உணவகம் மிகவும் சுகாதாரமற்ற நிலையிலும், உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெறாமலும், பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு இடையூறாகவும் உணவகம் நடத்தி வந்தது தெரிய வந்தது. எனவே உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி உணவகத்தை தற்காலிகமாக உணவகம் நடத்துவதை தடை செய்து சீல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இனிவரும் காலங்களில் அனைத்து அடிப்படை வசதிகளை சீர் செய்த பின்னரே உணவகம் நடத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உணவகம் நடத்தும் உணவு வணிகர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையிலும் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறினார். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட நியமன அலுவலர் Dr.R.ரமேஷ்பாபு, தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP


#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO