மண் உரிமை மற்றும் விதை பந்துகள் தயாரிப்பு - ஒரு வரலாற்று நிகழ்வு
கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ம் தேதி அன்று மிகுந்த உற்சாகத்துடனும் தேசபக்தி உணர்வுடனும் “மண் உரிமை மற்றும் விதை பந்துகள் தயாரிப்பு” என்ற நிகழ்வானது மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.
உயிரினங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அழகிய பூமிப்பந்தை பாதுகாக்க வேண்டுமெனில், இனிவரும் நாட்களில் கண்ணில் படும் இடமெல்லாம் விதைப் பந்துகளை வீசிச் செல்லுங்கள் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். விதைப் பந்துகளை மண்ணில் சிதறடித்த பிறகு கைவிட வேண்டும். போதுமான மழை பெய்தால், அவை துளிர்க்க ஆரம்பிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக நடத்தப்பட்ட விதை பந்துகள் தயாரிப்பு நிகழ்வில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விதை பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்நிகழ்வானது 15 நிமிடத்தில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து எட்டுநூத்தி இருபத்தி நான்கு விதை பந்துகள் தயாரிக்கும் முயற்சியாக நடைபெற்றது. 1,50,824 என்ற விதை பந்தின் எண்ணிக்கை (15.08.24) என்கின்ற நமது நாளைய சுதந்திர நாளை குறிப்பிடும் வகையில் அமைக்கப்பட்டது ஓர் சிறப்பாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்பதில் மிகையல்ல. விதை பந்துகள் தயாரிப்பு மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு மற்றும் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பு குறித்து ஒரு முக்கியமான அடையாளமாக அமைந்தது.
"விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்" என்ற தலைப்பில், கல்லூரியின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் நோக்கம், மரங்கள் மற்றும் பசுமை நிலங்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நமது சுற்றுப்புறத்தில் மரங்களை வளர்க்க உதவுவதாக ஆக இருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் சுற்றுப்புறத்துறையினர்களின் பங்கேற்புடன், விதைகள், மண் மற்றும் கம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி விதை பந்துகளை உருவாக்கினர்.
மாணவர்கள், விதை பந்துகளை உருவாக்குவதற்கான செயல்முறைகளை கற்றுக்கொண்டு, நிலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை புரிந்துகொண்டனர். இதன் மூலம், அவர்கள் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதில் தங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தனர். இந்த நிகழ்வு, மாணவர்களின் சமூகப் பங்கீடு மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு பற்றி அவர்களை விழிப்புணர்வுக்கு கொண்டு வந்தது. விதை பந்துகள் தயாரிப்பு மூலம், அவர்கள் கல்லூரியின் சுற்றுப்புறத்தில் மரங்களை வளர்க்கும் முயற்சியில் தங்கள் பங்களிப்பை செய்தனர்.
இது, மாணவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது, மேலும் எதிர்காலத்தில் மேலும் பல பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டும் வண்ணம் உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, மக்களின் மனதில் நிலைத்திருக்க, அவர்கள் பசுமை மற்றும் மண் உரிமையை பாதுகாப்பதற்கான எண்ணங்களை உருவாக்கியது. கொங்குநாடு பொறியியல் கல்லூரி, இத்தகைய நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் உறுதியாக உள்ளது. மேலும் இந்நிகழ்வானது மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களிடையே தேசபக்தி மற்றும் பெருமையை வளர்க்க உதவியது.
இந்த நிகழ்வு நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் அமைந்தது. கல்லூரியின் கேம்பஸ் டு கார்ப்பரேட் குழு மற்றும் பல துறை தலைவர்களின் குழுவுடன் இணைந்து இந்த நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது, கல்லூரியின் டீன், HOD, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பூமிப் பந்தை பாதுகாக்க விதைப் பந்து வீசலாம் வாங்க!: ‘வளர்ந்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்’.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision