தேசியக்கல்லூரியில் விவேகானந்தர் குறித்த சிறப்புக் கருத்தரங்கு விழா

தேசியக்கல்லூரியில் விவேகானந்தர் குறித்த சிறப்புக் கருத்தரங்கு விழா

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் விவேகானந்தர் குறித்த சிறப்புக் கருத்தரங்கு விழா நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட 4 அலகுகள் சார்பாக இவ்விழா நடைபெற்றது. தஞ்சாவூர் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ மாணவிகளிடம் விவேகானந்தர் குறித்த தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்தார்.

சிகாகோ நகரில் இந்தியாவின் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாகச் சொற்பொழிவு நிகழ்த்திய தன்மையையும், உலக அளவில் இந்தியர்களுக்கு இருக்கக்கூடிய பெருமையை எடுத்துரைத்ததையும் மாணவர்களிடையே தெளிவாக எடுத்துரைத்தார்.

சமூக வலைதளங்களில் ஒரு சில சமூக வலைதளங்கள் மாணவர்களைத் திசை திருப்பக் கூடிய தன்மையோடு இருப்பதையும் சுட்டி காட்டினார். நம் இந்தியப் பண்பாட்டைச் சிதைப்பதற்காக பிற வெளிநாட்டு சக்திகள் எவ்வளவு முயற்சித்தாலும் விவேகானந்தர் காட்டிய வழியில் நாம் பயணித்தால் நம்மை யாராலும் எதுவும் செய்து விட முடியாது என்ற பொருண்மையில் மிகச் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

விவேகானந்தர் குறித்து மாணவ மாணவிகள் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கும் சுவாமி விமூர்த்தானந்தா மிகத் தெளிவாகப் பதில் வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி அவர்கள் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினார் . நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO