சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை மாத பௌர்ணமி (12/5/2025) அன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு (10/5/ 2025 )சனிக்கிழமை முதல் (13/5/2025) செவ்வாய்க்கிழமை வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகம் கும்பகோணம் கூட்டத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் கும்பகோணம் திருச்சி துறையூர்,பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து 607 சிறப்பு பேருந்துகள் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.
கும்பகோணத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 145 பேருந்துகளும், திருச்சி துறையூர் பெரம்பலூர் திருவண்ணாமலைக்கு 190 பேருந்துகளும், அரியலூர் ஜெயங்கொண்டம் திருவண்ணாமலைக்கு 58 பேருந்துகளும், மயிலாடுதுறை திருவண்ணாமலைக்கு 65 பேருந்துகளும், நாகப்பட்டினம் திருவண்ணாமலைக்கு 50 பேருந்துகளும், காரைக்குடி திருவண்ணாமலைக்கு 48 பேருந்துகளும்,புதுக்கோட்டை
திருவண்ணாமலைக்கு 51 பேருந்துகளும், இயக்கப்பட உள்ளன.மொத்தம் 67 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டிய திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக இணையதளத்தின் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் ஆப் ஆண்ட்ராய்டு ஐபோன்
கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், செங்கம் ரோடு, அத்தியந்தல் மைதானம், செங்கம் ரோடு, விட்டோடிகள் நிலையம், வேலூர் ரோடு, அவலூர் ரோடு,செல்வபுரம் சிவக்குமார் மைதானம்,காஞ்சி கடலாடி ரோடு
டான்பாஸ்கோ பள்ளி மைதானம்,வேட்டவலம் ரோடு சர்வேயர் நகர், திருக்கோயிலூர் ரோடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எதிரில் உள்ள மைதானம், மணலூர்பேட்டை ரோடு, எஸ் ஆர் ஸ்டீல் கம்பெனி எதில் உள்ள மைதானம், மேலும் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கிடவும் பக்தர்களுக்கு எவ்வித சவுரியமும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நிர்வாக இயக்குனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அவர்கள் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision