மணிகண்டம் ஒன்றியத்தை திருச்சி மாநகரத்தின் துணை நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கு.ப.கிருஷ்ணன் பேச்சு

மணிகண்டம் ஒன்றியத்தை திருச்சி மாநகரத்தின் துணை நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கு.ப.கிருஷ்ணன் பேச்சு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான குப கிருஷ்ணன் தீவிர தொடர் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான அந்தநல்லூர் ஊராட்சி, மணிகண்டம் ஊராட்சி, மணப்பாறை, ஆகிய பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு கழகப் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இனாம்குளத்தூர் சமுத்திரத்தில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் வேலம்மாள் பழனிச்சாமி அவர்களின் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இராஜகோபுரம் முன்பு  இறுதி கட்ட பிரச்சாரத்தை நிறைவு ன செய்தார்.

அப்போது பேசி அவர்... இந்த நேரத்தில் தகுதியான ஒருவரை தேர்வு செய்யகூடிய கட்டத்தில் தான் தாங்கள் இருக்கின்றீர்கள் என்பதை நான் உணர்வேன். திருச்சியில் உள்ள திருவரங்கம் தீவு பகுதி மட்டும் புனித நகரமாக மத்திய அரசு, மாநில அரசு இணைந்து அறிவிக்க வேண்டும். இப்படி அறிவித்தால் இந்திய சுற்றுலா துறையின் நிதி கிடைக்கபெறும், எனவே சுற்றுலாத்துறை நிதியை கொண்டு வருதற்கு நான் பாடுபடுவேன். மேலும், தனி திட்டமாக கொள்ளிடம் நீர் ஆதாரம் பெற்று ஸ்ரீரங்கம் பகுதிக்கு குடிநீர் கொடுக்கப்படும், கொள்ளிடத்தில் கலக்கும் கழிவுநீர் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்ரீரங்கம் பகுதியில் சாலை, குடிநீர் பிரச்சனையை சரிசெய்யப்படும்,

மேலும் அந்தநல்லூர் ஒன்றியம் வாழை, நெல் பயிர்களை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றி அவர்களுக்கு நல்ல வருவாய் வர வழிவகுக்கப்படும், அதுபோல போதாவூர், புலியூர், போசம்பட்டி போன்ற பகுதியில் மல்லிகையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிகளை எடுக்கப்படும், மணிகண்டம் ஒன்றிய பகுதியை திருச்சி மாநகரத்தின் துணை நகரமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மணப்பாறை பகுதி மக்களுக்கு குடிநீர், சாலை போன்ற அனைத்து வசதிகளும் எடுக்கப்படும் எனகூறி குப கிருஷ்ணன் வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81