திருச்சி மாநகராட்சி வளாகத்தில் 50 அடி உயர கொடிமரத்தில் தேசியக்கொடி ஏற்றிய மேயர்

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் 50 அடி உயர கொடிமரத்தில்  தேசியக்கொடி ஏற்றிய மேயர்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 76வது சுதந்திர தின விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன்  தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி அலுவலகம் முன்பு 50 அடி உயரத்தில் புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இதில் முதல் முறையாக அதில் கொடியேற்றி வைத்து மேயர் அன்பழகன் இனிப்புகளை வழங்கினார்.

மாசற்ற முறையில் பணி புரிந்த 25 ஆண்டுகள் பணி முடிவுற்ற மாநகராட்சி பணியாளருக்கு ரொக்க தொகையும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் குழந்தைகள் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர்    வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகரப் பொறியாளர் சிவபாதம், ஏ.பீ.நசீர் அலி தலைவர் (சார்பு நீதிபதி) வரி விதிப்பு மேல்முறையிட்டு தீர்ப்பாயம்,  செயற்பொறியாளர்கள் குமரேசன், பாலசுப்ரமணியன்(பொ), மண்டலத்தலைவர்கள் ஆண்டாள்ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணான், ஜெயநிர்மலா, நகர்நலஅலுவலர்(பொ) மரு.சர்மிலி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO