திருச்சியில் மன்னர் முத்தரையர் சிலை அருகே தவெக கொடி - சர்ச்சை

திருச்சியில் மன்னர் முத்தரையர் சிலை அருகே தவெக கொடி - சர்ச்சை

மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசு மரியாதையுடன் சதய விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 900த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கட்சி பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கட்சியினர் யாரும் சிலைக்கு அருகில் கொடியை பிடித்து மேலே வரக்கூடாது என்று காவல்துறையினர் கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தனர். மிக முக்கியமாக தற்பொழுது தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்பொழுது அவருடன் வந்த கட்சி நிர்வாகி ஒருவர் விஜய் படத்துடன் கொடியை மேலே பிடித்திருந்தது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. மற்ற கட்சி நிர்வாகிகளும் எப்படி இவர்களை மட்டும் கொடியை சிலைக்கு அருகே எடுத்துச் செல்ல காவல்துறை அனுமதித்தனர் என்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision