முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி அண்ணா நகர் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 77ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஏற்பாட்டில்.250 ஏழை எளிய பெண்களுக்கு இலவச சேலை வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது

இவ்விழாவில் வருகை தந்த அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் சமயபுரம் அண்ணா நகர் பகுதியில் கழகத்தின் கொடி கம்பத்தில் கொடியினை ஏற்றி  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சேலைகளை வழங்கி இனிப்புகள் வழங்கிய பின்னர்.சுந்தர விநாயகர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision