மணல் கடத்தலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தவர் வீடு சூறை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாத்துறை ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டினை சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல்கார்கள் சிவானந்தம் ஓடு வீட்டினை மணல் கடத்தல் கும்பல் 30த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பட்டாகத்தி, இரும்பு ராடு, கட்டான்களுடன் 13 இரு சக்கர வாகனத்தில் வந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறையில் ஈடுபட்ட எசனைக்கோரை கிராமத்தை சேர்ந்த ராமதாஸ், ராமஜெயம், அஜய், அப்பு, பாலா, மதன், ராம்கி, சுதன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை சமயபுரம் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn