திருச்சியில் மலைப்பாதையாக மாறிவரும் மலைகோயிலுக்கு செல்லும் சாலை!! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
திருச்சி மலைக்கோட்டை போன்ற அமைப்புடன் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம்.
பல்வேறு தல வரலாறுகளை கொண்ட வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்தக் கோயில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கோயிலாகும்.இந்நிலையில் அந்த கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் இருந்து கோயிலுக்கு செல்லும் சாலை முழுவதுமே மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாத்தளம் மிகவும் அசுத்தமான சூழலை கொண்டுள்ளது.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடப்பக்கமாக உறைந்த நுழைவாயில் முன்புறத்தில் குடிநீர் குழாய் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக பள்ளம் தோண்டப்பட்டு அவை இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் முறையாக மூடப்படாமலும் பள்ளம் தோண்டப்பட்ட அள்ளப்பட்ட மண்ணும் அப்புறப் படுத்தப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் பயணிப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சாலையை சரி செய்யவும் பிரதான சாலையில் விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.