பெருமைக்காக மருத்துவத்துறை தேர்ந்தெடுக்கும் நிலை - திரைப்பட இயக்குனர் வசந்த பாலன் பேச்சு

பெருமைக்காக மருத்துவத்துறை தேர்ந்தெடுக்கும் நிலை - திரைப்பட இயக்குனர் வசந்த பாலன் பேச்சு

திருச்சி நாகமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அங்காடித் தெரு, வெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் வசந்த பாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து புகையிலை எதிர்ப்பு தொடர்பான காட்சிகளை குறும்படமாக வெளியிட்ட சிறந்த கலைஞர்களுக்கு நினைவு பரிசை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் திரைப்பட இயக்குனர் வசந்த பாலன் பேசும்போது... நான் ஒரு கலைஞனாக இருக்கும்போது என்னுடைய படைப்பை நேர்மையாக எடுத்துச் செல்ல வேண்டும். நேர்மையாக மக்களிடம் பேச வேண்டும் என இருந்தாலும் வியாபாரம் சம்பாதிக்கக்கூடிய துறையாக இருந்தாலும் மக்களிடையே நேர்மையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று எனக்கு எப்போதுமே தோன்றும். 

ஒரு கவுன்சிலர் பதவிக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளம் கூட வரவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கு 5 முதல் 6 லட்சம் வரை செலவு செய்கிறார்கள் அரசியல்வாதிகள். இன்று மருத்துவத்துறையும் நீட் போன்று தேர்வுகளால் மிகவும் காஸ்ட்லியான துறையாக மாறி வருகிறது. நீட் தேர்வை பற்றி தெரியாத மாநிலமோ, நாடோ இந்தியாவில் இல்லை. ஆனால் நீட் தேர்வை எழுத கூடிய மாணவர்களின் மனதில் தோன்றுவது அதிகம் சம்பாதிக்கலாம் இந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். 11ஆம் வகுப்பு படிக்கும் போதே நீட் தேர்வுக்கு 5 லட்சம் செலவு செய்வது வியாபாரியாக ஒருவனை இந்த சமூகம் அரசியல் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது என்ற கவலை எனக்கு இருக்கிறது. 

கோவிட் நேரத்தில் ஜெகன்மோகன் என்ற ஒரு மருத்துவர் காட்டுக்குள் சென்று மக்களுக்கு சிகிச்சை செய்து சேவை செய்து அவர் இறந்தது மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மருத்துவத்துறையை நாம் இழந்து விடுவோம் என்று இந்த அரசியல் சூழ்நிலையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். காந்தியை பற்றி எனக்கு தெரியும் என்றால் காந்தி படம் பார்த்து தான் எனக்கு தெரியும் என்று சிலர் கூறுகிறார்கள். காந்தியை பற்றி சிலர் தெரியாமல் பேசுகிறார்கள். 

மருத்துவத்துறை என்பது மக்களுக்கு சேவை ஆற்றக்கூடிய ஒரு புனிதமான துறை. ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பெருமைக்காக மருத்துவத்துறை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. திரைப்படங்கள் பொதுமக்களிடையே புகையிலை குடிப்பது, மது அருந்துவது என்ற பழக்கத்தை 100 மடங்கு காண்பித்து பெரிதாகி விட்டது.

இளைஞர்களுக்கு இணையாக பெண்கள் அதிக அளவில் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். சுதந்திரம் பற்றி பேசினால் பெண்களும் மது அருந்துகிறார்கள், புகை பிடிக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. என பேசினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision