திருச்சியில் அடுத்தடுத்த கோயில்களில் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டு.

திருச்சியில் அடுத்தடுத்த கோயில்களில் பூட்டை உடைத்து  நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டு.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடேசபுரத்தில் உள்ளது மாரியம்மன் கோவில் இந்த மாரியம்மன் கோவிலில் குணா என்பவர் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு 9 மணி அளவில் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விடியற்காலை 3 மணிக்கு கோயிலை திறப்பதற்காக வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் உள்ளே சென்று பார்த்த பொழுது அம்மன் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க தாலி மற்றும் உண்டியல் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இந்த திருட்டில் ஈடுபட்ட நபர்கள் உண்டியலை வெங்கடேசபுரம் காட்டுப்பகுதியில் பணத்தை எடுத்து விட்டு தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்.

அதேபோல் இதே கிராமத்தில் உள்ள பால மாரியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு கிராம் தங்கத் தாலியை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதற்கு முன்னதாக கலிங்கமுடையான் பட்டி மெய்யம்பட்டி வி.எ. சமுத்திரம் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து நான்கு கிராமங்களில் உள்ள கோவில்களில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டுப் போன சம்பவம் துறையூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision