டிவி,மொபைல் தெரியாத 3வயது குழந்தையின் மெய்சிலிர்க்கும் மூன்று சாதனைகள்

டிவி,மொபைல் தெரியாத 3வயது குழந்தையின் மெய்சிலிர்க்கும் மூன்று சாதனைகள்

திருச்சி ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர். இவரது மகன் டேனியல் தேவதீரன் இரண்டு வயது 11 மாத குழந்தை . எஸ்தர் தன்னுடைய தோழி வீட்டிற்க்கு மகனை அழைத்துச் சென்ற பொழுது சிறு குழந்தைகள் நாட்டின் தலைநகரம் கொடிகளையும் காண்பித்தால் நாட்டின் பெயரைக் குறிப்பிடுவது குறித்து பேசியுள்ளார் .அப்பொழுது தனது மகனை அதேபோல் பயிற்சியும் கொடுத்துள்ளார் .முதல் நாள் 5 நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு பொழுது அதன் தலைநகரமாக அடுத்த நாள் ஞாபமாக தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து பயிற்சியில் தற்பொழுது 100 நாடுகளின் பெயர்களை சொல்லும்பொழுது அதற்கான தலைநகரை 2 நிமிடம் முப்பத்தி எட்டு நொடிகளில் சொல்லி சாதனை புரிந்துள்ளார். பொதுவாக  சிறு குழந்தைகள் நாட்டினுடைய கொடிகளை காண்பித்தால் பெயர்களைக் குறிப்பிடுவார்கள். 
ஆனால் டேனியல் இப்பொழுது  நாட்டின் பெயரைக் குறிப்பிட்டால் தலைநகரையும் கொடிகளை காண்பித்தாலும் நாட்டின் பெயரையும் சொல்லும் திறன் படைத்தவர். இவர் புரிந்த இந்த சாதனை 2021 ஜீலை 16 ம் தேதி இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் பதிவு பெற்றுள்ளது. யூனிவர்சல்,ப்யூசர் கலாமில் ஜுலை 3ம் தேதி சாதனை புரிந்து புத்தகத்தில்  இடம் பெற்றார்.

இவர் இன்னும் பள்ளிக்கூடம் (Prekg) கூட செல்லவில்லை.மிக குறைந்த வயதில் இந்த சாதனை புரிந்துள்ளார் முதல் நபர் என்ற பெருமையையும் சேர்த்துள்ளார்.
மேலும் திருக்குறள் 15ம் மாநிலங்களின் தலைநகர்களையும்,வாகனங்கள்,விலங்குகள்,பறவைகளின் பெயர் குறிப்பிடுவார் என அவரது தாய் பெருமைப்பட குறிப்பிடுகிறார். இவருடைய இந்தத் திறமை இரண்டு வயது ஐந்து மாதத்தில் கண்டுபிடித்து ஆறு மாத பயிற்சியில் டேனியல் 3 சாதனைகளை புரிந்துள்ளதாக தாய் தெரிவித்தார். குறிப்பாக சிறு குழந்தைகள் என்றால் தற்போது மொபைல் மற்றும் தொலைக்காட்சிகளை பார்ப்பது வழக்கமாக உள்ளனர்.

 ஆனால் டேனியலை பொறுத்த அளவு மொபைலிலும் தொலைக்காட்சியும் அவர் கண்ணில் பட்டதில்லை கார்ட்டூன் என்ற சேனலும் அவருக்கு தெரியாது. இவைதான் டேனியல் ஞாபகத்திறனுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision