இன்று உலக தெருவிலங்குகள் தினம்

இன்று உலக தெருவிலங்குகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் உலக தெருவிலங்கு தினம் ஏப்ரல் 4 அன்று கொண்டாடப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு டச்சு தேசிய தெருவிலங்குகள் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட டச்சு அமைப்புகள் கூடிய போது இந்நாள் தொடங்கப்பட்டது.

உலக விலங்குகள் தினத்திலிருந்து சரியாக ஆறு மாதங்கள் இருப்பதால் ஏப்ரல் 4 தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. தெரு நாய்கள் மற்றும் பூனைகள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டவை அல்லது தெருக்களில் பிறந்தவற்றை பராமரிக்க யாரும் இல்லை.

இந்த விலங்குகள் நகரங்கள் அல்லது கிராமப்புறத்தில் உணவு மற்றும் தங்கும் இடத்திற்காக சுற்றித் திரிவதை நாம் காணலாம். தெரு நாய்கள் மூலம் காய்ச்சல் நோய்கள் பரவுவதை தடுக்க அவற்றிற்கு தடுப்பூசி அளிக்க வேண்டும்.நாய்களைப் பாதுகாக்க சட்டங்கள் அமல்படுத்த வேண்டும். மேலும் தெரு நாய்களுக்கு நாம் பலவிதங்களில் உதவலாம்.

உணவு சுத்தமான நீர் வழங்குதல் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த உதவுதல் போன்ற வழிகளில் நாம் உதவலாம்.  மேலும் அவற்றிற்கு உதவ முன் வரவேண்டும்.தெரு விலங்குகள் மனிதர்களுடன் இணைந்து வாழும் திறன் கொண்டவை.

தெரு விலங்குகள் பற்றி தவறான கருத்துக்களை மாற்ற வேண்டும். நாம் தெரு விலங்குகளிடம் அன்போடும் மனித நேயத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று Pet galaxy Founder நித்யா மற்றும் டாக்டர் கணேஷ்குமார் MVSc ஆகியோர் கூறினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision