நாளை (24.09.2023) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - திருச்சி சிவா எம்.பி அழைப்பு

நாளை (24.09.2023) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - திருச்சி சிவா எம்.பி அழைப்பு

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 20-ம் ஆண்டு சங்கமம் சந்திப்பு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

நாளை (24.09.2023) காலை 10:30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவுக்கு சங்கத்தின் புரவலரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா தலைமை வகிக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகை லெட்சுமி சிவச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார்.

தந்தை பெரியார் கல்லூரியில் சேரும் தாய், தந்தையரை இழந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி, அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரே ஏற்றுக் கொள்ளும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. 

மேலும் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெரியார் கல்லூரி மாணவ மாணவிகள், பல்வேறு துறைகளில் மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். அதைத்தொடர்ந்து திரைப்பட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, பழனி குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர். இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் இவ்விழாவில் தவறாமல் பங்கேற்று, தங்களுடன் படித்த பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து மகிழுமாறு எம்.பி திருச்சி சிவா அழைப்பு விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision