திருச்சியில் பாரம்பரிய விதை திருவிழா - இலவசம் - அனைவரும் வாரீர்

திருச்சியில் பாரம்பரிய விதை  திருவிழா - இலவசம் - அனைவரும் வாரீர்

பசுமை சிகரம், கிரியா, அக்னி அறக்கட்டளை தர்ம இயக்க கூட்டமைப்பு, கடந்த 10 வருடங்களாக சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் முன்னேற்றத்திற்கு பல்வேறு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

தற்சமயம் காய்கறி விவசாயிகள் மற்றும் மாடி தோட்டம் அமைக்க விரும்பும் பொதுமக்கள் பயன் பெரும் வகையில் பாரம்பரிய விதை திருவிழா நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளார்கள் . நிகழ்ச்சியானது வருகின்ற (27.07.2024) (சனிக்கிழமை) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் 'தமிழ்நாடு ஹோட்டல் காவேரி அரங்கில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெற உள்ளது.

1. பாரம்பரிய நெல் விதை, நாட்டு காய்கறிகள் விதைகள், இயற்கை வேளாண் இடு பொருட்களை பொதுமக்களும், விவசாயிகளும் வாங்கிட அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

2. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இலவச இயற்கை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீ ஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் யோகா ஆராய்ச்சி மைய மேலாண் இயக்குனர் மரு.ஆர்.சுகுமார் முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவச இயற்கை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

3. மாலையில் விவசாயிகள் பயன் பெரும் வகையில் இலாபம் தரும் காய்கறி சாகுபடி பற்றி வேளாண் பொறியியலாளர் பிரிட்டோ ராஜ் உரையுடன் விவசாயிகளின் கேள்விகளுக்கு மாலை 5-7 மணி வரை விடை அளிக்கிறார் 

மேலும் தகவல்களுக்கு : நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் .கே.சி.சிவபாலன் ( அலைபேசி - 9500414717) மற்றும் யோகநாதன் சிறுசோழன் (அலை பேசி 9442816863) அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision