மணப்பாறை அருகே பாரம்பரிய மீன் பிடி திருவிழா

மணப்பாறை அருகே பாரம்பரிய மீன் பிடி திருவிழா

மணப்பாறை அருகே பாரம்பரிய மீன் பிடி திருவிழா-எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஸ்பா பொய்கைபட்டியில் அணைக்குளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் 2023 ம் ஆண்டுக்கு பின் குளம் முழுதுமாக நீர் நிரம்பியது. தற்போது கோடை காலம் துவங்கிவிட்டதால்

 குளத்தில் நீரின் அளவு வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது நீரின் அளவு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி இன்று ஊர் முக்கியஸ்தர் முத்தையா துண்டை சுழற்றி விழாவை தொடங்கி வைக்க மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் துவங்கினர். அதில் சிலர் கொசு

 வலைகளைப்பயன் படுத்தியும் மீன் பிடித்தனர். விரால், கெண்டை, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் சிக்கியது.அனைவருக்கும் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கவில்லை. பெரிய அளவிலான மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் கிடைத்தவரை போதும் என்று பிடித்த மீன்களுடன் பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழாவில் ஜாதி, மத பேதமின்றி

 சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒற்றுமையாக கலந்து கொண்டு மகிழ்வுடன் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானார் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision