திருச்சி BHEL பொது மேலாளர் துப்பாக்கியால் அறையில் சுட்டு தற்கொலை - அதிர்ச்சி 

திருச்சி BHEL பொது மேலாளர் துப்பாக்கியால் அறையில் சுட்டு தற்கொலை - அதிர்ச்சி 

திருச்சி திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் பல ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.பெல் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு குடியிருப்புகளும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிப்டுகள் இருந்தாலும் அதிகாரிகளுக்கு காலை 8:30 மணி முதல் 4.30 மணி வரை இந்த பணி நேரம் இருக்கும்.

இந்நிலையில் பெல் நிறுவனத்தின் எஸ் எஸ் டி பி பிரிவில் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கணேசபுரம் 8வது தெருவை சேர்ந்த சண்முகம் பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சண்முகம் (50) வழக்கம் போல் நேற்று காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார்.அப்படி சென்றவர் மாலை 4.30 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சண்முகம் எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து பெல் நிறுவன அலுவலகத்திற்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டுள்ளனர். உடனே அலுவலக ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த பொழுது அலுவலக கதவு சாத்தப்பட்டு இருப்பதாகவும் மேலோட்டமாக பார்த்து வந்து தகவல் கூறியுள்ளனர். இந்நிலையில் நீண்ட நேரமாக சண்முகம் வீடு திரும்பாத நிலையில் அவரது மனைவி பார்வதி மீண்டும் பெல் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் பெல் ஊழியர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்த பொழுது அறையின் உள் பக்கம் கதவு தாளிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிகாலை 1.30 மணியளவில் கதவைத் தட்டி பார்த்து உள்ளனர். கதவு திறக்காத நிலையில் கதவை உடைத்து பார்த்த பொழுது சண்முகம் அங்குள்ள சோபாவில் துப்பாக்கியால் தலையில் வைத்து சுடப்பட்ட நிலையில் சோபாவில் இறந்து கிடந்துள்ளார். ரத்தமும் உறைந்து கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெல் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பெல் போலீசார் விசாரணை நடத்தினர். சண்முகத்திற்கு பார்வதி என்ற மனைவியும் அவர் பெல் வளாகத்தில் உள்ள பெல் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்கு ஒரு மகள் உள்ளார் அவர் தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் பயின்று வருகிறார். சண்முகத்திற்கு இதய நோய் பிரச்சனை இருந்து வருவதும் அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதாக மனைவி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சுட்டுக்கொண்டு இறந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை என்பதும் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் பெல் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பெல் நிறுவனத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 telegram மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision