திருச்சி மத்திய மாவட்ட திமுக அறிக்கை.
தி.மு.கழக தலைவரும், தமிழக முதல்வருமான, அண்ணன் மாண்புமிகு தளபதி அவர்கள் மணப்பாறையில் நடக்கும் பாரத சாரண சாரணியர் வைர விழாவில் கலந்து கொள்வதற்காக (02.02.2025)ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர விருக்கின்றார். திருச்சிக்கு வருகை தரும் முதல்வர் அவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சிகளில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைசெயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து நம் முதல்வர் அவர்களுக்கு விமான நிலையத்தில் எழுச்சி மிகு வரவேற்பு அளித்திட வேண்டுகிறோம்.
திமுகழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் அவரது நினைவு நாளான (03.02.2025)ம் நாள் திங்கட்கிழமை காலை: 7.00 மணியளவில் திருச்சி சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணா அவர்ககளின் திருவுருவசிலைக்கும் அதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் கே.என்.நேரு அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற,சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு மறைந்த நம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்திட அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision