திருச்சி - சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு

திருச்சி - சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு

திருச்சி - சென்னை பசுமை வழி சாலை, திருச்சி - தஞ்சை, திருச்சி - கரூர் 6 வழி சாலை மற்றும் திருச்சி - காரைக்குடி 4 வழி சாலை அமைக்கப்படும் என மகாராஸ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி நேற்று அறிவித்தார்.

தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநிலங்களில் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது மற்றும் பழைய சாலைகள் புணரமைப்பது குறித்த கூட்டம் மகாராஸ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமை வகித்தார்.

இதில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளை புணரமைப்பது மற்றும் புதிய சாலைகள் அமைப்பது குறித்த திட்டங்களை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்தார். இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களையும் நிதின்கட்கரி அறிவித்தார். அதில் திருச்சி - சென்னை இடையில் பசுமை வழிச் சாலை அமைக்கப்படும். திருச்சி - தஞ்சை, திருச்சி - கரூர் இடையிலான 2 வழிச் சாலை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும்.

அதே போன்று திருச்சி- காரைக்குடி இடையிலான இரண்டு வழிச்சாலை, 4 வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision