பாதுகாப்பான பிரசாதம் உணவு வழங்கும் 4 கோவில்களுக்கு சான்றிதழ் திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

பாதுகாப்பான பிரசாதம் உணவு வழங்கும் 4 கோவில்களுக்கு சான்றிதழ் திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த மாதங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதான கோயில்களுக்கு நடைபெற்ற BHOG ( Blissful Hygienic Offering to God) சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான பிரசாதம் உணவு வழங்கும் இடத்திற்கு சான்றிதழ் வழங்குவதற்காக நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் கூறப்பட்ட முன்னேற்ற அறிவிப்புகளை நிவர்த்தி செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து புதுடெல்லி உணவு பாதுகாப்பு துறை ஆணையத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு BHOG ( Blissful Hygienic Offering to God) சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான பிரசாத உணவு வழங்கும் இடத்திற்கு நான்கு சான்றிதழ்கள் முறையே ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் கோவில் , திருவானைக்கோவில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் மற்றும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் ஆகியோருக்கான சான்றிதழ்களையும்,

சாலையோர உணவு வணிகர்களுக்கு 07.08.2021 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 193 நபர்களுக்கு FOSTAC ( Food Safety Training and Certification) பயிற்சி கொடுக்கப்பட்டு அதனுடைய சான்றிதழ்களையும், சாலையோர உணவு வணிகர்களுக்கு அதே 07.08.2021 அன்று சிறப்பு உரிமம் பதிவு முகாம் நடைபெற்ற போது அவர்களால் அன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட 79 பதிவு சான்றிதழ்களையும்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற 4 அங்கன்வாடி மையத்திற்கு Eat Right Campus (சரியான உணவு உண்ணும் வளாகம்) சான்றிதழ்களையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற 4 அங்கன்வாடி மையத்திற்கு HYGIENE RATING (சுகாதாரம் மதிப்பீடு பயிற்சி) சான்றிதழ்களையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தில் 1463 பணியாளர்களுக்கு காணொளி மூலமாக உணவு பாதுகாப்புத்துறை புதுதில்லி அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு முதல் கட்டமாக 206 நபர்களுக்கு FOSTAC ( Food Safety Training and Certification) பயிற்சி சான்றிதழ்களையும்,

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கு 03.08.2021 அன்று நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் சுமார் 26 நபர்களுக்கு FOSTAC ( Food Safety Training and Certification) பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்களையும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சுமார் 11 உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை புதுடெல்லி அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் 11 HYGIENE RATING (சுகாதார மதிப்பீடு) சான்றிதழ்களையும், ஆகமொத்தம் 527 சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் சிவராசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். நான்கு கோவில்களின் உதவி ஆணையர்கள் கந்தசாமி ஸ்ரீரங்கம், மாரியப்பன் திருவானைக்கோவில், மலைக்கோட்டை விஜயராணி, ஞானசேகரன் வெக்காளியம்மன் கோவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, உணவக உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சுந்தரேசன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் பொருளாளர் மகேந்திரன், சாலையோர உணவு வணிகர் சங்கத்தின் தலைவர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn