திருச்சி மன்னார்புரம் சிக்னலை மதிக்காமல் செல்லும் அரசு பேருந்துகள் - அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்
திருச்சி மாநகரில் மிக முக்கியமான சிக்னலாக மன்னார்புரம் சிக்னல் பார்க்கப்படுகிறது. மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு அந்த ரவுண்டானாவை கடந்து செல்ல வேண்டும்.
நெரிசல் மிகுந்த அந்த ரவுண்டானாவில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிக்னல்களை கனரக வாகனங்கள் முக்கியமாக அரசு பேருந்துகள் மதிப்பதில்லை அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அரசு பேருந்துகள் செல்வதாக நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
காவல்துறையினர் தொடர்ந்து அரசு பேருந்து கைகாட்டி நிறுத்தியும் அவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். அதையும் தாண்டி சிக்னல்களை மதிக்காமல் மீறி செல்லும் நிலை ஏற்படுவதாக போக்குவரத்து காவல்துறையினரே தெரிவிக்கின்றனர். மாநகர காவல் ஆணையர் உடனடியாக சிக்னலை மதிக்காமல் செல்லும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது அபராதங்களை விதித்து விபத்து ஏற்படாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision