மூன்று தலைமுறைகளைக் கடந்து 58-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திருச்சி ஸ்ரீ சரஸ்வதி கபே

மூன்று தலைமுறைகளைக் கடந்து 58-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திருச்சி ஸ்ரீ சரஸ்வதி கபே

அறுசுவை உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு விருந்தோம்பல் முறையில் எப்பொழுது முகத்தில் புன்னகையோடு வரவேற்று அனுசரிக்கும் திருச்சி ராக்கின்ஸ் சாலையில் இருக்கும் ஸ்ரீ சரஸ்வதி கபே   சைவ பிரியர்களுக்கு பிடித்த மிகவும் பிரபலமான பாரம்பரியமான  உணவகம் ஆகும்.

 ஸ்ரீ சரஸ்வதிகபே பாரம்பரிய சைவ உணவகம்  இன்றோடு தங்களுடைய  58 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றனர்.
1964ஆம் ஆண்டு ஜூலை 15 KPவெங்கடேசன் என்பவரால் தொடங்கப்பட்டது.
அவரின் மகன் பாண்டுரங்கன் தொடர்ந்து பேரக்குழந்தைகள் 
 ராஜேஷ் ,கோபி,கௌரிசசச்கர் என்று மூன்று தலைமுறைகளைகளாக இன்றைக்கும் திருச்சியின் பிரபலமான உணவகங்களில் ஒன்றாக ஸ்ரீ சரஸ்வதி கபே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

  தூய்மையாகவும் ஆரோக்கியமான முறையிலும் உணவினை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே தங்களுடைய  கொள்கையாக கொண்டுள்ளனர்.
 உணவின் சுவையை அதிகரிப்பதற்காக அஜினமோட்டோ நிறமூட்டிகள் போன்ற எதையும் பயன்படுத்தாமல் ஆரோக்கியமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவினை அளித்து வருகின்றனர்.

 இவர்கள் தங்களுடைய தொழில் முறையில்  அக்கறையோடு செயல்படும்  அதே சமயம் சமூக அக்கறையுடன் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏழை எளிய மக்களுக்கு நான்  வாடிக்கையாளர்கள்  பிறந்தநாள் திருமணநாட்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பதாக இருந்தால்  ஆடர் செய்யும் உணவிற்கு 15 சதவீதம் சலுகை அளிக்கின்றனர்.

நாம நன்றாக இருக்கவேண்டும் எனில் நம்மை சுற்றி இருப்பவர்களை நலமும் மிக முக்கியமானது எனவே   உணவகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவு முதல்  அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதில்   தவறியதே இல்லை.

 இயற்கை பேரிடர் கால கட்டங்களிலும் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதில் அவர்களின் பங்களிப்பாக  குழந்தைகள்  காப்பகம் அனாதை ஆசிரமங்கள் போன்றவற்றிற்கு  சென்று அவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.58ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக கடந்த 57 ஆண்டுகள்  தொடர்ந்து  ஆதரவளித்து வரும் மக்களுக்கு தங்களுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக  இன்றைய தினம் ஆயிரம் பேருக்கு  உணவு பொட்டலங்களும் 2000 மரக்கன்றுகளும் வழங்கயிருக்கின்றனர் 


சமூக அக்கறை கொண்டு செயல்படும் இவ் உணவகத்திற்கு உலக சுகாதார அமைப்பின் திருச்சி பிரிவின் சார்பாக சிறந்த உணவகத்திற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM