திருச்சி கேகே நகர்  சாலைகளில் வழிந்தோடும்   கழிவு நீரால் பொதுமக்கள் அவதி 

திருச்சி கேகே நகர்   சாலைகளில் வழிந்தோடும்   கழிவு நீரால் பொதுமக்கள் அவதி 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மணிகண்டன் தெரு,  ஐயப்பா நகர், கேகே நகர் பகுதிகளில் பாதாள  சாக்கடை நீர் தொடர்ந்து வெளியெறிக் கொண்டு இருப்பதால் மக்கள் அந்தப்பாதையை பயன்படுத்துவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். 

"கோடை காலங்களிலும் அந்தப்பகுதி சாலைகளில் சாக்கடை நீர் வழிந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது மழை பெய்து வருவதால் மேலும் அப்பாதை முழுவதுமாக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி அருகே கோவில் இருப்பதால் அப்பகுதியில் கோயிலுக்கு செல்ல சாலையை பயன்படுத்துபவர்கள் கீழே விழுந்து விடும் நிலைதான் இருக்கின்றது" என்கின்றனர் அப்பகுதி மக்கள். 

மேலும், வாகனங்கள் செல்ல முடியாத சூழலில் நடந்து செல்பவர்களுக்கு கூட மிகப் பெரும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி வாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

அதுமட்டுமின்றி மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியிலேயே குப்பைகளும் கொட்டப்படுவதால் புதர் போல்  அந்த பகுதியே காட்சியளிக்கிறது.  .  வீடுகளில்   இருக்கும் குப்பைகளை வாங்கி சென்றாலும் சாலையோர குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு தவறிவிடுகின்றனர் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

மாநகராட்சி நிர்வாகம் விரைந்து இதற்கான தீர்வை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn