வேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை - 150க்கும் மேற்பட்டோர் கைது!!

வேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை - 150க்கும் மேற்பட்டோர் கைது!!

வேளாண் சட்டங்களை கண்டித்து SDPI கட்சியினர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவாசாயிகளுக்கு ஆதரவாகவும் SDPI கட்சியின் சார்பாக இந்தியா முழுவதும் மாபெரும் போராட்ட இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் SDPI கட்சியினர் திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட இமாம் R ஹஸ்ஸான் தலைமையில் மாவட்ட துணை தலைவர் பிச்சைகனி, மாவட்ட பொதுசெயலாளர் நியமத்துல்லா, மாவட்ட செயலாளர் முபாரக், மாவட்ட பொருளாலர் காதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் மஜீத், தளபதி அப்பாஸ், முகமது சுகைப், மீரான், ஜவஹர் அலி மற்றும் விவசாய அணி தலைவர் சகாப்தீன், வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக், SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் முஸ்தபா, சுற்றுச்சுழல்துறை அணி தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி நிர்வாகிகள், கட்சியின் செயல்வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a