ஆசிய அளவில் சிங்கப்பூரில் நடந்த கராத்தே போட்டியில் திருச்சி வீரர் சாதனை

ஆசிய அளவில் சிங்கப்பூரில் நடந்த கராத்தே போட்டியில் திருச்சி வீரர் சாதனை

ஆம்பூர் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (40). இவர் 25 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி செய்து வருகிறார். மேலும் கராத்தே பயிற்சி மையம் தொடங்கி நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் ஆனந்தகுமார் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். தற்பொழுது 2024 நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் அளவிலான கராத்தே போட்டியில் 24 நாடுகளைசேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட ஆனந்தகுமார் வெண்கல பதக்கம் வென்று திருச்சிக்கு மட்டுமல்லாது நமது மாநிலத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். மேலும் ஆனந்தகுமார் கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் குழந்தைகள் பிரிவில் சத்யதேவ், தனன்யாஸ்ரீ, கிருஷாந்த், ஏ.எம் யாழினி ஆகியவர்கள் தமிழ்நாட்டு சார்பாக பங்கு பெற்றனர்.

கராத்தே போட்டியில் கலந்து கொண்டு திருச்சிக்கு பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு சமூக ஆர்வலர்களும், விளையாட்டு வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision