திருச்சி பழைய கொள்ளிடம் பால இரும்பு தூண்களால் உய்யக்கொண்டானில் மியூசியம் - ஆட்சியரிடம் வேண்டுகோள்

திருச்சி பழைய கொள்ளிடம் பால இரும்பு தூண்களால் உய்யக்கொண்டானில் மியூசியம் - ஆட்சியரிடம் வேண்டுகோள்
திருச்சி பழைய கொள்ளிடம் பாலத்தில் இடித்தெடுக்கும் இரும்பு தூண்களால் உய்யக்கொண்டானில் மியூசியம் - ஓரே இடத்தில் இரண்டு பாரம்பரிய சின்னங்கள் 
திருச்சி, திருவானைக்காவல் – சமயபுரம்  டோல்கேட்டை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ல் 12.5 மீ அகலம், 792 மீ நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் பயன்பாட்டில் இருந்து வந்த இப்பாலம் வலுவிழந்ததால், இப்பாலத்தில் 2007 முதல் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த பழைய பாலத்துக்கு மாற்றாக அதனருகிலேயே ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, 2016ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பொழுது கடந்த 2018 ஆம் ஆண்டு உடைந்த பழைய இரும்பு பாலத்தின் 18,19 வது தூண் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.இந்நிலையில்  17வது தூண் கடந்த ஆகஸ்ட் ல் (9.8.2022)  விழுந்தது.
இதனால்  மற்ற தூண்கள் விழுந்ததால் அருகில் உள்ள புதிய பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவியது.புதிய பாலத்தின் தூண்களை சீர்செய்ய ₹6.28 கோடியும், பழைய பாலத்தை அகற்ற ₹3.10 கோடியும் 2 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அதில் மின்சார கம்பிகளும் உள்ளது . கொள்ளிடத்தில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்படுவதற்க்கு முன் தற்போது கொள்ளிடம் பழைய பாலத்தை இடிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத அந்த பழைய பாலத்தை இடிக்கும் பணிகள்  நேற்று(06.11.2022) முதல் துவங்கிய மிக விரைவாக நடைபெற்று வருகிறது பழைய கொள்ளிடம் பாலத்தில் உள்ள இரும்பு தூண் அப்படியே வைக்கப்பட்டு நடுவில் உள்ள சிமெண்ட் காரைகள் ஜேசிபி வாகனம் மூலம் உடைத்து எடுக்கப்படுகிறது.
 பின்பு கிரேன் மூலம் அந்த இரும்பு தூண்கள் அகற்றப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மீண்டும் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பாக இந்த பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்நிலையில் திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் இருந்து வாழவந்தான்கோட்டை வரை 72 கிலோமீட்டர் தூரம் கொண்ட திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் .ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாய்க்காலை ராஜராஜ சோழன் வெட்டிய இந்த வாய்க்கால் என வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகிறது. வெளிநாடுகளில் உள்ளது போல் மாநகருக்குள்  செல்கிறது. இதனை அழகுபடுத்த திருச்சி சிட்டிசன் உய்யக் கொண்டான் அமைப்பு எட்டு ஆண்டுகளாக அழகுபடுத்த மாநகராட்சி உடன் இணைந்தும், தனியாகவும் பூங்காக்களை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
 உய்யக்கொண்டான் அமைப்பில் உள்ள வரும் கட்டிடக்கலை வல்லுநருமான விஜயகுமார் குறிப்பிடும் பொழுது...
இந்நிலையில் பழைய கொள்ளிடம் பாலத்தில் உடைத்து எடுக்கப்படும் இரும்பு தூண்கள் அனைத்தும் 100 ஆண்டுகள் பழமையானது. அதேபோல் தற்பொழுது அந்த தூண்களை அந்த வலிமையில் செய்ய முடியாதது. அதனை பாதுகாக்கவும் வரலாற்றுச் சின்னமாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் அமைக்கவும் இந்த அமைப்பு மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 பழைய கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உள்ள இரும்பு தூண்கள் அதில் உள்ள வேலைப்பாடுகள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியது.பாரம்பரியத்தை காத்து உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே இதனை அமைத்தால் கொள்ளிடம் பாலத்தின் வரலாற்று பாரம்பரிய பதிவுகள் கொண்ட அருங்காட்சியகத்தை அமைத்து பொதுமக்கள் உய்யக்கொண்டான் வாய்க்காலில் குறுக்கே நடைபாதையாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால் மேலும் மாநகர் அழகுபெறும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO