கேலா  விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும் திருச்சி  பட்டதாரி இளைஞன்

கேலா  விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும் திருச்சி  பட்டதாரி இளைஞன்

விவசாயத்தில் நாள்தோறும் பல்வேறு வளர்ச்சி அடைந்துவரும்  நிலையில் தற்போது திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தில்  போதாவூரை சேர்ந்த ஒண்டிமுத்து என்ற பட்டதாரி இளைஞர் தன்னுடைய சொந்த நிலத்தில் நவீ னதொழில்நுட்பத்தைக்கொண்டு வாழை   உற்பத்தி செய்து இருக்கிறார். 


சிறப்பம்சம் யாதெனில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் கேலா விருத்தி என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகிறார் இதுகுறித்து நம்மோடு பேசிய ஒண்டி முத்து  அவர்கள் கூறியதாவது, சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது அதிகம் நாட்டம் கொண்டிருந்தேன்  வாழ்வில் அதனை தொடர்ந்து செய்யவேண்டும்  என்றே என்னுடைய இளங்கலை படிப்பில் பண்ணை துறையில் பட்டம் பெற்றேன்,
 என் சொந்த நிலத்தில் நெல்,எள்  போன்றவற்றை விவசாயம் செய்து வந்த போதுதான்  தேசிய ஆராய்ச்சி மையத்தில் வாழை உற்பத்தி, வாழை விவசாயம் பற்றிய பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு கேலா விருத்தி என்ற முறையில் தற்போது என்னுடைய சொந்த நிலத்தில் விளைவித்து வருகிறேன் கேலாவிருத்தி எற்பது   அதிக அளவில் தரமான நோய்கள் அற்ற தாய் மரத்தை ஒத்த பண்புகளைக் கொண்ட வாழை கன்றுகளை குறுகிய காலத்தில் உருவாக்கும் முறையாகும்.
  விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம்.
இது சாதாரண கன்று உற்பத்தி முறைக்கும் 
திசு வளர்ப்பு முறைக்கும் இடையேயான ஒரு சிறந்த மாற்று வழி முறையாகும்.
 அடிப்படை வசதிகள் ஆக நிழல் கூடாரம் அமைத்து அதிகளவான கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனில் கூடாரம் அவசியமாகின்றது மூங்கில் அல்லது சவுக்கு மரங்கள் மற்றும் தென்னை ஓலைகளைக் கொண்டு  உருவாக்கிக் கொள்ளலாம் இல்லையெனில் பச்சை அல்லது கருப்பு நிற நரம்பு வலைகளை  கொண்டு 90% நிழலை  ஏற்படுத்த முடியும்.


  இந்த முறையில் விவசாயம் செய்வதால் ஏற்படும் பயன்கள்,விவசாயிகள் லாபமடைய  எளிய தொழில்நுட்பம்.

 விவசாயிகள் தாங்களாகவே தங்கள் தோட்டங்களில் தங்களுக்கு தேவையான தரமான கன்றுகளை உற்பத்தி செய்து கொள்ளலாம்.

 இதற்கு முதலீடு மிகவும் குறைவாகத்தான் இருக்கும் கன்றுகள் அனைத்தும் தாய் மரத்தை ஒத்ததாக இருக்கும் ஒரு தாய் தண்டியிலிருந்து நான்கு முதல் ஐந்து மாதங்களில் 50 முதல் 60 தரமான கன்றுகளை பெற முடியும்.

 திசு வளர்ப்பு கன்றுகளை ஏற்படுவது போன்ற உடல் மாறுதல்கள் இங்கு ஏற்படுவது கிடையாது.
  இந்த முறையின் மூலம் 1.52 செலவில் நல்ல தரமான தாய் மரத்தை ஒத்த  பண்புகளுடன் கன்றுகளை விவசாயிகள் தாங்களாகவே உற்பத்தி செய்துகொள்ள முடியும் இம்முறை பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்கள்  வகைகள் அனைத்தும் மிக எளிதாக கிடைக்கக் கூடியது ஆகும்.


 இந்த எளிய முறை அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும்போது உற்பத்தி செலவு குறைவதோடு மட்டுமின்றி நாட்டின் விதைகள் உற்பத்தியும் அதிகரிக்கும் என்கிறார். நெய்பூவன், பூவன்  கற்பூரவல்லி போன்ற வாழை ரகங்களை தற்போது விளைவித்துள்ளதாகவும் மேலும் ஒவ்வொரு மரத்திலிருந்தும் குறைந்தது 20 நாட்களில் 10 முதல் 20 கிளைகன்றுகளை  உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார். முதலில் இத்திட்டத்தை தொடங்கும் பொழுது 200 கன்றுகளை கொண்டு தொடங்கினேன் இதன் மூலம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் 500 கன்றுகளை அதனால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார் ,எதிர்காலத்தில் வாழை விவசாயிகளுக்கு இது நல்லதொரு வளர்ச்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் முயற்சியை தொடங்கியுள்ளதாகவும்  மேலும் 
இந்த முறையை செயல்படுத்துவதற்கான பொருளாதார ரீதியாக தனக்கு  நபார்டு வங்கி உதவியதாக கூறியபோது,
 நபார்டு வங்கியின் திருச்சிராப்பள்ளி மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன் கார்த்திக் அவர்கள் தெரிவிக்கும்போது தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண்மை வளர்ச்சி பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி  திருச்சி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற  தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு கடனுதவி வழங்கிவருவதாவும்  விவசாயிகளுக்கு நவீன வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி விவசாய உற்பத்தி இரட்டிப்பாகும் வழிகள் குறித்த பயிற்சி மற்றும் மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற திட்டங்களில் நபார்டு வங்கி நிதியுதவி வழங்கும் அவ்வகையிலேயே தற்போது ஒண்டிமுத்து  அவர்களுக்கும் உதவியுள்ளது.
 குறிப்பாக இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துபவர்களுக்கு நபார்டு வங்கிகள் பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி அவர்களுக்கு உதவியும் செய்து வருகின்றது என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF